தமிழ்நாடு

மாற்றப்பட்ட அமைச்சகங்கள் பெயர்கள்: இனிமேல் இதுதான் துறைகளின் பெயர்கள்

Published

on

நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் தனது அமைச்சரவையில் இடம்பெற இருக்கும் அமைச்சர்களின் பெயர்களையும் அவர்களின் துறைகளையும் சற்று முன்னர் அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் முதல்வராக பொறுப்பேற்க முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள்- துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பெயர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அமைச்சகங்களின் துறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண்மை துறை என்பது உழவர் துறை என்றும், சுற்றுச்சூழல் துறை என்பது காலநிலை மாற்றத்தை என்றும், மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறை என்றும், மீன் வளம் என்பது மீனவர் நலத்துறை என்றும், தொழிலாளர் நலன் என்பது திறன் மேம்பாட்டு துறை என்றும், செய்தி மக்கள் தொடர்பு துறை என்பது செய்தி துறையாகவும், சமூக நலன் என்பது மனித உரிமை துறையாகவும், நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது மனிதவள மேம்பாட்டுத் துறை என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பது வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version