தமிழ்நாடு

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

Published

on

என் தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை என முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்டாலினின் சகோதரருமான முக அழகிரி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சராக உள்ள ஸ்டாலினிஅ பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும் என் தம்பி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சியை தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் முக அழகிரி அவர்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்தது என்பதும் ஸ்டாலினால் தான் திமுகவில் இருந்து முக அழகிரி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தற்போது ஸ்டாலினுக்கு அழகிரி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version