தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வருவதை மு.க.அழகிரி விரும்புவார்: பொடிவைத்து பேசும் எஸ்.வி.சேகர்!

Published

on

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ரஜினி ஆதரவாளர்களும் பாஜகவினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் இது தொடர்பாக பேசியுள்ளார்.

பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசுயது தவறு எனவும், அதனை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசினார். அப்போது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார்.

இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார் என்று கூறினார் எஸ்.வி.சேகர். இந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகர் ஏன் தொடர்பில்லாமல் மு.க.அழகிரியின் பெயரை குறிப்பிட்டார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் வாய்ப்பை தடுத்துவிடுவார் என்ற யூகத்தில் மு.க.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் கூறியிருக்கலாம் என பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version