வணிகம்

தமிழ்நாட்டிற்கு வரும் மிட்சுபிஷி.. எங்கு? எவ்வளவு முதலீடு?

Published

on

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் புதிய ஆலையைத் தொடங்க உள்ளது அறிவித்துள்ளது.

சென்னையில் அமைய உள்ள மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஆலையில் ஏசி மற்றும் ஏசிக்கு தேவையான கம்ப்ரசர்களை தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனம் இந்த ஆலைக்காக 222.5 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.

சென்னையில் தொடங்கப்பட உள்ள மிட்சுபிஷி ஆலையில் 2025-ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்படும்.

ஆண்டுக்கு 3,00,000 ஏசி மற்றும் 6,50,000 கம்ப்ரசர்கள் இந்த ஆலையிலிருந்து தயாரிக்க உள்ளதாகவும் மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

இதற்காக 1,45,000 சதுர அடியில் சென்னையில் ஆலையை மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவியுள்ளது.

மேலும் இதன் மூலம் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியும் உள்ளன.

Trending

Exit mobile version