தமிழ்நாடு

காணாமல் போன கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை: மயிலாப்பூர் குளத்தில் உள்ளதா?

Published

on

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து காணாமல் போன மயில் சிலை மயிலாப்பூர் குளத்தில் புதைந்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த மயில் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனது. இந்த சிலையை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளது.

காணாமல் போன சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மயிலாப்பூர் குளத்தில் புதைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது .

குளத்தை தோன்டாமல் சிலையை கண்டறிய அண்ணா பல்கலைக்கழக உதவியை நாடியுள்ளதாகவும் கோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அதில் புதைந்துள்ள மயில் சிலையை கண்டுபிடிக்க 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version