தமிழ்நாடு

தமிழக அமைச்சருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இன்று காலை 4 மணி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த 14 நாட்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பதவியேற்ற இரண்டு அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

author avatar
seithichurul

Trending

Exit mobile version