இந்தியா

கொரோனா அதிகரிப்பு எதிரொலி.. மாநில அரசைக் கண்டித்த ஒன்றிய சுகாதாரத் துறை!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. அண்மையில் கேரளாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

அதுகுறித்து விளக்கம் கேட்டு ஒன்றிய சுகாதாரத்துறை, கேரளா சுகாதாரத் துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு விவரங்களைக் கேரள அரசு சரியாகத் தெரிவிக்கவில்லை. ஐந்து நாட்கள் தாமதமாக கொரோனா பரவல் எண்ணிக்கை தகவலை அளித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை கேரள அரசைக் கண்டித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று குறித்த தகவலைச் சரியான நேரத்தில் அளித்தால் தான் முடிவுகளைச் சரியாக எடுக்க முடியும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version