தமிழ்நாடு

‘சன் டிவி-ய எல்லாம் தூக்குங்க..’- கடுப்பான அமைச்சர் விஜய பாஸ்கர் ! (வீடியோ)

Published

on

சன் டிவி மைக் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அகற்றிய அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது மைக்குகள் நிறைந்த மேஜையின் முன் வந்து அமர்ந்த அமைச்சர் விஜய பாஸ்கர் சன் டிவி-யின் மைக்கை மட்டும் அகற்றுமாறு தெரிவித்தார். விஜய் பாஸ்கர், “சன் டிவி-ய தூக்கு” எனக் குறிப்பிட்டு மைக்கை அகற்றச் சொல்லி உள்ளார்.

மேலும் விராலிமலை சன் டிவி நிருபரையும் மைக் உடன் வெளியேற்றி விட்டனர். சன் டிவி-க்கு எல்லாம் பேட்டி தர முடியாது என்று மறுத்துள்ளார் அமைச்சர். சில நாட்களுக்கு முன்னர் இந்த நிருபர் தான் அமைச்சர் விஜய பாஸ்கர் தேர்தல் நெருங்குவதால் கட்சி தலைவர்கள் இன்றி தனது புகைப்படத்தை மட்டும் அச்சடித்து பொங்கல் பரிசு வழங்கி உள்ளதாக செய்தி வெளியிட்டார்.

இதைக் காரணமாகக் கொண்டு தான் அமைச்சர் விஜய பாஸ்கர் சன் டிவி-க்குப் பேட்டி தர மறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அமைச்சரின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மைக்கை தூக்கி எறிபவர்களின் ஆட்சிக் காலத்தை மக்கள் தூக்கி எறியத் தயாராகிவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version