தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளும் நீக்கப்படுகிறதா? சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!

Published

on

தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளும் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் பெறப்படுவது நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இதனால் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலுள்ள 32 சுங்கச் சுங்கச்சாவடிகளும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்றும் எனவே 32 சுங்கச்சாவடிகளை நீக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 32 ல் சாவடிகள் நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் உண்மையில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இதுகுறித்த நடவடிக்கையை தமிழக அரசு சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version