தமிழ்நாடு

தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைப்பதா? அமைச்சரின் டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி!

Published

on

‘தமிழணங்கைப் போற்றுகிறோம்’ என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைப்பதா? என்று தமிழணங்கு ஓவியத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார். மேலும் உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்றும், இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

‘ஸ’ என்ற எழுத்தை சேர்த்ததற்காக இவ்வளவு பொங்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ‘ஸ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் வைத்திருக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து என்ன சொல்லுவார் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்

ஒரு சிலர் ஸ்டாலின் என்ற பெயரை இனிமேல் தமிழில் எப்படி அழைப்பது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்

‘ஸ’ என்பது வடமொழி எழுத்தாக இருந்தாலும் தமிழ் எழுத்துகளோடு கலந்து பல வருடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எழுத்தை பயன்படுத்தியதால் தமிழரே இல்லை என்ற வகையில் குறிப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசி இருப்பது தவறு என்று பல நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்

Trending

Exit mobile version