தமிழ்நாடு

சாத்தான் வேதம் ஓதுவது போல… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

Published

on

நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது விட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசினார். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

Thangam Thennarasu and Vanathi

பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், நிறையபேர் பேசும்போது கார்ப்பரேட்டுக்கு கொடுத்துவிடுவார்கள் அம்பானி, அதானி என்றெல்லாம் பேசினார்கள். 2011 ஜனவரி 4-ஆம் தேதி இன்றைய முதல்வர் அன்றைய துணை முதல்வராக இருந்தபோது 100 கோடி ரூபாய் முதலீட்டில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டோடு ஒரு ஒப்பந்தத்தை போட்டு 1500 பேருக்கு வேலை கிடைக்கும், 3600 கோடி ரூபாய் வணிகம் நடக்கும் என சொல்லி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை இன்றும் இருக்கிறது என்று பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சாத்தான் வேதம் ஓதுவது போல, தனியாருக்குக் கொடுப்பது பற்றியெல்லாம் பாஜக பாடம் நடத்துகிறதே என்பதை தான் நான் பார்க்கிறேன். கொஞ்சம் ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டும் போது 3 விரல்கள் நம்மை நோக்கி இருப்பதை பார்த்தால் தனியாருக்கு தாரை வார்ப்பது பற்றியெல்லாம் நாம் பேசுகிறோமே என்பது தெரியவரும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version