தமிழ்நாடு
ஆட்டம் போடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுகுட்டியுடன் ஒயிலாட்டம் ஆடிய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.
கோவை காளப்பட்டி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சரை தங்களோடு சேர்ந்து ஒயிலாட்டம் ஆடுங்கள் என வலியுறித்தினர். இதற்கு அமைச்சர் வெக்கப்பட, அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆகியோர் அமைச்சரை வலியுறுத்த அவரும் வெட்கத்தை விட்டு அங்கிருந்தவர்களோடு ஆட்டம் போட்டார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.