தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

Published

on

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைனில் மது விற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்குமார் அறிவித்ததை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது நன்றியை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் மது கடை விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், மேலாளர்கள் ஆகிய அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு கூடுதலாக அரசுக்கு ரூபாய் 15 கோடி செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது தான் அந்த கோரிக்கையை தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் பெரும்பான்மையான வருமானம் டாஸ்மாக்கில் இருந்துதான் கிடைத்து வருகிறது என்பதால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடியிலும் சம்பள உயர்வு சாத்தியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version