தமிழ்நாடு

எந்த இடத்தில் மின்வெட்டு? குறிப்பிட்டு கூற முடியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி

Published

on

தமிழகத்தில் எந்த இடத்தில் மின் வெட்டு என குறிப்பிட்டு கூற முடியுமா என மின்வெட்டு குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பொத்தாம் பொதுவாக மின்வெட்டு என்றும் குற்றம் கூற கூடாது என்றும் எந்த இடத்தில் மின்வெட்டு என்பதை மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மின்கணக்கீட்டில் கணக்கில் தவறு செய்யும் மின் வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒரு மாநிலம் எப்போது தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்கிறதோ, அப்போதுதான் மின் மிகை மாநிலம் என்று கூறமுடியும் என்றும், மின்சாரத்திற்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்காமல் உடனடியாக மின் இணைப்பு எப்போது கிடைக்கிறதோ அப்போது தான் மின்மிகை மாநிலம் என்று கூறமுடியும் என்றும் கூறினார். தற்போது தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்றும், இவ்வாறு லட்சக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் தமிழகம் மின்மிகை மாநிலமாக என்று கூறுவது எப்படி சரியானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார்

seithichurul

Trending

Exit mobile version