தமிழ்நாடு

20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்த அதிமேதாவி: அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி!

Published

on

மின் ஒப்பந்தம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி 20 ஆயிரம் புத்தகங்களை வாசித்துள்ள அதிமேதாவிக்கு புரிதல் வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

எண்ணூர் மின் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர் .

நஷ்டத்தில் இயங்கும் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும் திமுகவிற்கு வேண்டப்பட்ட நிறுவனம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும், குற்றச்சாட்டுகளை 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தனக்கு கெடு விதிக்க செந்தில் பாலாஜி யார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து 13 ஆயிரத்து 700 நாட்களில் 20 ஆயிரம் புத்தகம் வாசிக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டுமென செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் 20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்து இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இவ்வாறு விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version