தமிழ்நாடு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Published

on

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது சுமார் 405 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு 11 மருத்துவ கல்லூரிகள் புதிதாக திறக்கப்படவுள்ளன. இதனால் மருத்துவம் படிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிக மருத்துவ சீட்கள் கிடைக்கும்.

தமிழகத்தில்  வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளைப் பொறுத்த அளவில், பள்ளி நிர்வாகித்தனர் விருப்பப்பட்டால் ஆன்லைன் மூலம் அரையாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று கூறினார். பின்னர், பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்தப் பின்னரே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

Trending

Exit mobile version