தமிழ்நாடு

10,12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் அறிவிப்பு..

Published

on

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் தேர்வுகள் நடத்தப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில், பள்ளி நிர்வாகம் விரும்பினால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வுகள் நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று (டிச.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடப்பு கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை போடப்பட்ட விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அது பேராசிரியர் ஒருவர் செய்த தவறால் ஏற்பட்ட விளைவு என்று கூறினார். அதற்காக உடனடியாக அந்தப் பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்யவும் முடியாது என்றும் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version