தமிழ்நாடு

12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published

on

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி முதல் மே மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கான தேர்வு அட்டவணையும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அடுத்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் கூறியுள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

வரும் மே மாதத்துடன் தமிழக சட்டசபை காலம் முடிவடைவதால் ஏப்ரல் இறுதியிலேயே சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் கூறியபடி தேர்தலுக்கு முன்பு என்றால் ஏப்ரல் இரண்டாவது வாரமே 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கல்வி பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
seithichurul

Trending

Exit mobile version