தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனை உறுதி செய்வது போல் சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியானது என்பதும் இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்ததாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 2வது வாரம் இந்த தேர்வு நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

மேலும் பிளஸ் டூ தேர்வை எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும் ஒரு அறைக்கு 25 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார்

Trending

Exit mobile version