தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது தான் ஓரளவிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து வகுப்புகளிலும் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர் கூறியிருந்தார். இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அல்லது தேர்தல் முடிந்த பின்னர் தான் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறி வந்தன.

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது என்றும் கூறினார். மேலும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் உருது படித்த ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Trending

Exit mobile version