தமிழ்நாடு

சின்னம்மாள் என்ற பெயரையே உச்சரிக்க வேண்டாம்: கட்சியினருக்கு கட்டளையிட்ட அமைச்சர்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுகவினர் அழைத்து வந்தனர் என்பதும் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பின்னரும் ஒரு சில அமைச்சர்களும் தொண்டர்களும் சசிகலாவை சின்னம்மா என்றுதான் அழைத்து வந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது கட்சியினருக்கு சின்னம்மாள் என்ற பெயரை உச்சரிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக திமுகவிலிருந்து சின்னம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது சின்னம்மாள் என்ற பெயரை அடிக்கடி கட்சியினர் பயன்படுத்தி வந்ததால் அந்த பெயர் சசிகலாவை குறிக்கும் என்று கருதுவதால் சின்னம்மாள் இந்த பெயரையே உச்சரிக்க வேண்டாம் என்றும் பொதுவாக திமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டால் போதும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சியினர்களுக்கு உத்தரவிட்டு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version