தமிழ்நாடு

பாஜக தலைவர் தான் கூட்டணி முதல்வரை அறிவிப்பார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பகீர்

Published

on

பாஜக தலைவர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாளை நடைபெறும் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் 2021 வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம்.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். ஆனால், மாநில கட்சிகளோடு அகில இந்தியக் கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது, முதல்வர் வேட்பாளரை அகில இந்தியக் கட்சி தான் அறிவிக்கும்” என்றார்.

Trending

Exit mobile version