தமிழ்நாடு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் நிலத்திற்கு ஆபத்து: அதிரடி நடவடிக்கை எடுக்கின்றார் அமைச்சர்!

Published

on

சென்னை அருகே உள்ள கிஷ்கிந்தா என்ற தீம் பார்க் கோயில் நிலம் என்றும், அதை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள கிஷ்கிந்தா என்ற தீம் பார்க்கில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவார்கள் என்பதும் இது சென்னை மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல தீம் பார்க் கிஷ்கிந்தா கோவில் நிலத்தை பயன்படுத்தி இருப்பதாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க அறநிலை துறை அமைச்சர் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்து வல்லுனர்களின் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிஷ்கிந்தா அமைந்திருக்கும் இடம் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் உருவான நிலம் என்றும் நூத்தி எழுபத்தி ஏழு ஏக்கர் அமைந்துள்ள கிஷ்கிந்தா இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும் இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அந்த நிலத்தை மீட்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோவிலுக்கு சொந்தமானது இல்லை என்பதால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிலுக்கு நிலத்திற்கு சொந்தமான இடத்தை கிஷ்கிந்தாவுக்கு அளித்தது யார்? அந்த நிலம் மூலம் பலன் பெற்றது யார்? கைமாறிய பணம் எவ்வளவு என்பது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் இந்த விவகாரம் பூதாகரமாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version