தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Published

on

சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் அறநிலையத் துறையிடம் இணைக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்றும் அதற்கான சட்ட போராட்டம் நடத்தி சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.

மேலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version