தமிழ்நாடு

சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: அமைச்சர் சேகர்பாபு

Published

on

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ’உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கும், தீட்சிதர்களுக்கும் எதிராக இந்து சமய அறநிலையத்துறையை எப்போதும் செயல்படாது என்றும் தீட்சிதர்கள் விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை ஏற்கும் என்று நாங்கள் எப்போதுமே கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் பிரதமரை சந்திக்க சந்திப்பதாக இருந்தால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம் என்றும், அது ஒரு ஜனநாயக உரிமை என்றும் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version