தமிழ்நாடு

கமல் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெற்றிபெறுவது குறித்தே யோசிக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி அதிரடி!

Published

on

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் மனதில் தோன்றுவதை அப்படியோ தயங்காமல் பேசக்கூடியவர். விமர்சனங்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதிரடியாக பேசக்கூடியவர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில், அறநிலையத் துறை சார்பில் நேற்று சமபந்தி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது கமல்ஹாசன் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெற்றிபெறுவது குறித்தே யோசிக்க வேண்டும். யார் கட்சி ஆரம்பித்தாலும் சிறிது வாக்குகளை மட்டும்தான் பிரிக்க முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆளும், திமுக வாழும்.

கமல்ஹாசன் கட்சியும், இனி ஆரம்பிக்கப் போகிறவர்களின் கட்சியும் நகர்ப்புறக் கட்சிகள். ஊடகங்கள் வேண்டுமானாலும் அவர்களை அங்கீகரித்து செய்தி ஒளிபரப்பு செய்யலாமே தவிர, கிராமப்புறங்களில் அவர்களுக்கு வேலையே இல்லை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version