தமிழ்நாடு

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஸ்கார்பியோ கார்: தினகரனை கலாய்க்கும் அதிமுக அமைச்சர்!

Published

on

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரது தேர்தல் அறிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்தது. நேற்று பேசும்பொருளாகவும் மாறியது தினகரனின் தேர்தல் அறிக்கை. திமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை காட்டிலும் தினகரனின் அமமுக தேர்தல் அறிக்கை சிறப்பானதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுக களத்திலேயே இல்லை. அந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் என்ன வேணும்னாலும் கொடுக்கலாம். தனி சேட்டிலைட், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார்ன்னு என்னன்னாலும் சொல்லலாம். அந்தக் கட்சிதான் களத்திலேயே இல்லியே என்றார்.

மேலும் தங்கத்தமிழ்ச்செல்வன் அங்கே போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. டிடிவி தினகரனின் அணி கரைஞ்சுக்கிட்டிருக்கு. தேர்தல் வர்றதுக்குள்ள தங்கத்தமிழ்ச்செல்வன் வெளியே வந்திருவார். தேனியில் தினகரன் எப்படி நிற்பாரு? 20 ரூபா டோக்கன் கொடுத்துத்தான் ஆர்.கே. நகர்ல ஜெயிச்சாரு. திரும்பவும் போயி தேர்தல்ல நின்னா, டோக்கனை வச்சே அடிப்பாங்க. இந்தத் தேர்தலோடு அந்தக் கட்சிக்கு மூடு விழா நடத்தி, எல்லாரும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு வந்திருவாங்க என்றார் ராஜேந்திர பாலாஜி.

seithichurul

Trending

Exit mobile version