தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தான்: இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்கள் இருந்து வருவதால் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு உள்ளதை உள்ளபடியே பேசக்கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டாயம் இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது வீட்டை குண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்று நேற்று முன்தினம்கூட மிரட்டல் வந்தது. ஸ்டாலின் நடந்து சென்றால் யாரும் கேட்கப்போவது கூட கிடையாது. அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு உள்ளது. மக்கள் செல்வாக்குள்ள, மக்கள் தலைவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும். முதல்வருக்கு வலுவான பாதுகாப்பு வளையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version