தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்? அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Published

on

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தீபாவளி, பொங்கல் உள்பட விசேஷ தினங்களில் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்பதும் இதன் மூலம் லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அதை ஒட்டி தொடர் விடுமுறையும் வரும் நிலையில் ஏராளமானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரயில்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்தி பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு செய்துகொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version