தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் உள்ள 5 ஓட்டல்களில் பேருந்துகளை நிறுத்த தடை: அமைச்சர் உத்தரவு!

Published

on

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு சில ஹோட்டல்களில் நிறுத்தப்படும் என்பதும் அப்போது பயணிகள் உணவு இடைவேளைக்காக இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அருகே உள்ள ஐந்து ஓட்டல்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அரசு பேருந்துகள் பயணிகளின் உணவுத் தேவையை கருதி ஒரு சில ஹோட்டல்களில் நிறுத்தப்படும் என்றும் ஆனால் சுகாதாரமற்ற அதே நேரத்தில் விலை அதிகமாக உள்ள ஹோட்டல்களில் மட்டுமே பேருந்துகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் களுக்கு இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவும் அரசு அதிகாரிகளுக்கு கமிஷன் வருகிறது என்பதற்காக தரமற்ற ஓட்டல்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் இந்த புகார்களை பரிசீலனை செய்து விக்கிரவாண்டியில் உள்ள அண்ணா, உதயா, ஹில்டா,வேல்ஸ் மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து ஓட்டல்களில் அரசு பேருந்துகளை உணவுக்காக நிறுத்த தடை விதித்துள்ளார்.

இந்த ஐந்து உணவகங்களிலும் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version