தமிழ்நாடு

முருகன் – நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி தகவல்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர்களில் சிலர் அவ்வப்போது பரோலில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு நீண்ட நாள் விடுப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்

வேலூரில் உள்ள ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறையில் அமைச்சர் ரகுபதி மற்றும் ஆர் காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறையில் உள்ளவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை செய்தார்.

இதன் பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சந்திப்பின்போது முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ரகுபதி கூறியபோது ’முருகன் மற்றும் நளினி ஆகியோருக்கு தமிழக அரசால் 30 நாட்கள் மட்டுமே அதிகபட்சமாக விடுப்பு வழங்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து மேலும் 30 நாட்கள் வேண்டுமானாலும் நீடிக்கலாம் என்றும், ஆனால் அதைவிட அதிகமாக நீண்ட விடுப்பு வேண்டுமென்றால் முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தான் நாட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே தமிழக அரசால் நீண்ட விடுப்பு முருகன் மற்றும் நளினிக்கு அளிக்க முடியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version