தமிழ்நாடு

7 பேர் விடுதலை: தமிழக அரசு சட்டச்சிக்கலில் சிக்காது என அமைச்சர் ரகுபதி பேட்டி

Published

on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்காது என்று சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் வாடி வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் அந்த தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அந்த தீர்மானத்தின் குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். தற்போது ஜனாதிபதி இன்னும் அந்த 7 பேர் விடுதலை குறித்த தகவலை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரையில் நேற்று மத்திய சிறைச்சாலையில் ஆய்வு செய்தபின் சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது ’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் இருப்பதாகவும், அவரை நான் தமிழக அரசு நிர்ப்பந்தம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஒரு சிலர் சட்ட சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் ஆனால் தமிழக அரசு எந்த சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது போல் மற்றவர்களுக்கும் பரோல் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து மனு அளித்தால் தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி வந்தவுடன் 7 பேர் விடுதலைக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ளாது என அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version