தமிழ்நாடு

அரியர் மாணவர்களுக்கு தேர்வு ஆன்லைனிலா? நேரடியாகவா? அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை அறிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் 20 லட்சத்து 875 மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத உள்ளனர் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் போலவே அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றாலும் கல்வியாளர்கள் ஆன்லைன் தேர்வுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version