தமிழ்நாடு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தப்படுமா? அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை 15% என உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்த நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ள நிலையிலும் அதனை 15 செய்த உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு கல்லூரி பேராசிரியர் களிடமிருந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு கல்லூரியில் அதிகமான மாணவர்கள் இருப்பதை அடுத்து தற்போது மீண்டும் கூடுதலான மாணவர்கள் இருந்தால் பேராசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version