இந்தியா

இந்தியாவில் டெஸ்லா கார் தயாரிக்கலாம், ஆனால்.. எலான் மஸ்குக்கு செக் வைத்த மத்திய அமைச்சர்

Published

on

உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு கார் உற்பத்தி செய்ய வரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் என ஒரு நிபந்தனையும் மத்திய அமைச்சர் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறிய போது, ‘இந்தியாவில் வந்து எலான் மஸ்க் டெஸ்லா கார்களை தயாரிக்க நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் இந்தியாவில் அதற்கான திறமும் தொழில்நுட்ப வசதிகளும், தொழிலாளர் பலமும் இருக்கிறது என்றும் இந்தியாவில் டெஸ்லா காரை தயாரித்தால் காரின் உற்பத்தி அதிகரிக்கும், விலையும் குறையும் என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் டெஸ்லா காரை சீனாவில் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது என்றும் நிதின் கட்காரி கூறியுள்ளார் .

இதனை அடுத்து இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தியை எலான் மஸ்க் தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version