தமிழ்நாடு

கள்ள ஓட்டு கும்பலை பாதுகாப்பாக காரில் அழைத்து சென்ற அதிமுக பெண் அமைச்சர்!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிகான தேர்தல் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது காலை முதல் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் 1 மணிக்கு பின்னர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அமைச்சர் நிலோபர் கபில் கள்ள ஓட்டு போட வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்ததாகவும், அவர்களை பாதுகாப்பாக தனது காரில் அழைத்துச் சென்றதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.

வாணியம்பாடியின் பல இடங்களில் அமைச்சர் நிலோபர் கபில் ஏற்பாட்டில் கள்ள ஓட்டு போடுவதற்காக வெளிமாவட்டத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்தாக இரண்டு கும்பலை திமுகவினர் பிடித்துள்ளனர். மேலும் பெரியபேட்டை பகுதியில் கள்ள ஓட்டு போட வந்த ஒரு கும்பலை திமுகவினர் பிடித்து ஓரு வீட்டில் அடைத்துவைத்துள்ளனர். ஆனால் அப்போது அங்கு வந்த அமைச்சர் நிலோபர்கபில், அவரது உதவியாளர், காவல் ஆய்வாளர் சந்திரசேகர், அதிமுக நகர்மன்ற செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களை தங்களுடன் காரில் அழைத்து சென்றுள்ளார் அமைச்சர்.

இதனையடுத்து அமைச்சருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அமைச்சரின் உதவியாளரும், காவல் ஆய்வாளர் சந்திரசேகரும் திமுகவினரை பிடித்துதள்ளிவிட்டு கள்ள ஓட்டு போட வந்த கும்பலை அமைச்சரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version