தமிழ்நாடு

உதயநிதி நடித்த படங்களை வைத்து அவருக்கு புகழுரை சூட்டிய அமைச்சர்!

Published

on

உதயநிதி எம்எல்ஏ நடித்த படங்களை வைத்து அவருக்கு அமைச்சர் மூர்த்தி புகழுரை சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இன்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களை பட்டியலிட்டு அவருக்கு புகழுரை சூட்டினார். அவர் கூறியதாவது:

அன்புக்கு இலக்கணமான உதயநிதி அவர்களே நீங்கள் நடித்ததோ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது.

நீங்கள் நடித்த படம் கெத்து. நீங்கள்தான் தமிழகத்தில் சொத்து. எதிரிகளை தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் நீங்கள் உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன், நிஜத்தில் நீங்கள் தான் மாமனிதன். நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

சரவணன் இருக்க பயமேன் என்று நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்று தமிழகத்து இளைஞர்கள் எண்ணம். நெஞ்சுக்கு நீதி பாத்திரமேற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள், நெஞ்சுக்கு நீதி அடுத்த பாகம் ஆகவும் வாழ்கிறீர்கள்.

மாமன்னன் அடுத்த படம் அல்ல, தமிழ் நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள் தான். எங்களின் இதயங்களை வெல்லும் உதயமும் நீங்கள் தான் நிதியும் நீங்கள் தான்’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version