தமிழ்நாடு

அதிமுக சினம் கொண்ட சிங்கம், திமுக மதம் கொண்ட யானை: அமைச்சரின் எதுகை மோனை விமர்சனம்!

Published

on

தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தான் சார்ந்திருக்கும் அதிமுகவை சினம் கொண்ட சிங்கம் எனவும், எதிர்க்கட்சியான திமுகவை மதம் கொண்ட யானை எனவும் எதுகை மோனையில் ரைமிங்காக விமர்சித்துள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கூட்டணிகள் பிரதானமாக உள்ளன. ஒன்று திமுக, காங்கிரஸ் கூட்டணி இதில் மற்ற சில கட்சிகளும் உள்ளன. மற்றொன்று அதிமுக, பாமக, பாஜக கூட்டணி. இதில் பின்னர் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளும் தங்கள் அணிதான் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கணிகண்டன், சினம் கொண்ட சிங்கமான அதிமுக மதம் கொண்ட யானையான திமுகவிடம் தோற்காது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எப்போதும் நன்மை செய்தது கிடையாது. காவிரி பிரச்சனை, நீட் விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்களில் துரோகம் செய்துள்ளது. ஆனால் அதிமுக பாஜகவின் இரட்டை இலை-தாமரை கூட்டணி இயற்கை கூட்டணி என்றார் ரைமிங்காக.

seithichurul

Trending

Exit mobile version