தமிழ்நாடு

சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்!

Published

on

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று இரவு நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை அடிக்கடி மாற்றக்கூடியவர். அமைச்சர்கள் மீது ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக சாட்டையை சுழற்றக்கூடியவர் ஜெயலலிதா. அடுத்தடுத்து அமைச்சரவையை மாற்றிக்கொண்டே அமைச்சர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் ஜெயலலிதா.

இதனால் தனது அமைச்சர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற பயத்துடனே அடக்கி வாசிப்பார்கள் அமைச்சர்கள். இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமி தற்போது தான் முதல்முறையாக ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அந்தத் துறை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிக்கு பின்னணியில் மணிகண்டன் அளித்த ஒரு பேட்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version