தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு

Published

on

அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் எம்பிபிஎஸ் சீட் கிடைத்து மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 544 அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டு அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைத்துள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று 20 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் அமைச்சர் சுப்பிரமணியம் ஆய்வு செய்த் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் இருந்தது என்றும் அதை அமல்படுத்துவதற்குள் தேர்தல் விதிமுறைகள் நடத்தை விதிகள் வந்துவிட்டதால் தேர்தலுக்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100% தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி போட்டவர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவது இல்லை என்பதால் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version