தமிழ்நாடு

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது என அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கப்பட்டது மினி கிளினிக்குகள் என்பதும் இந்த கிளினிக்குகளுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மாவின் மினி கிளினிக்குகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாக ஒரு அமைப்பாக தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன என்றும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மினி கிளினிக்குகள் செவிலியர்கள் இல்லாமல் செயல்படாமல் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மினி கிளினிக்குகளுக்கு நியமனம் செய்யப்பட்ட 1820 மருத்துவர்களும் தற்போது கொரோனா பணியில் உள்ளனர் என்றும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1820 மருத்துவர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்திக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுகின்றன என்பது குறிபிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version