தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Published

on

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், நீட் பாதிப்பு தொடர்பாக ஏகே ராஜன் குழுவிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் மக்கள் வேண்டுகோளை ஏற்று நீட் தேர்வு ரத்து என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது என்றும் கூறினார்

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக சட்டமன்றத்தில் கூறியது என்றும் ஆனால் தற்போது நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதிலிருந்து அக்கட்சி நீட் விவகாரத்தில் இரட்டைவேடம் போடுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதிபதி ஏகே ராஜன் குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்தோடு பாஜக பொதுச் செயலாளர் கருணாகரன் வழக்கு தொடுத்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version