தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு குழந்தை கொடுத்த விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Published

on

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரெக்கமண்டேஷனுக்காக சென்ற இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் பரப்பப்பட்டு வருகிறது. அதில் குழந்தையின் தந்தையின் பெயர் டி.ஜெயகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு அமைச்சர் இப்படி இளம்பெண்ணை மோசம் செய்துவிட்டாரே என பரவலாக பேச்சு இருந்தது. இந்த ஆடியோவும், பிறப்பு சான்றிதழும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, சசிகலா குடும்பத்தை முழுமையாக எதிர்ப்பதால், என்னை நேரிடையாக எதிர்க்க முடியாமல், ஆடியோவை மார்ஃப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்க்க தயாராக உள்ளேன். இது தொடர்பாக வழக்கு தொடர்வேன்.

சவால்விட்டு சொல்கிறேன், ஆடியோவில் வருவதுபோன்று நான் யாருடனும் பேசியது இல்லை. டி.ஜெயக்குமார் என்று உலகில் நான் மட்டுமா உள்ளேன். களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதி இது. எந்த பரிசோதனைக்கும் நான் தயாராக உள்ளேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version