தமிழ்நாடு

மே 2ல் வாக்குப்பதிவு: திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்!

Published

on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது

வாக்குகளை எண்ணும் பணிகளில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருக்கும் நிலையில் சற்று முன் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளோம். அதாவது வாக்குகள் எண்ணும் நாளான மே இரண்டாம் தேதி மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

மே ஒன்றாம் தேதியே தபால் வாக்குகளை என்ன கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம் தபால் வாக்குகளை மே 1ஆம் தேதியை எண்ணவுள்ளதாக ஒருசில மாவட்டங்களில் இருந்து புகார் வந்ததை அடுத்து இந்த கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்’ என்று கூறினார்

 

 

 

seithichurul

Trending

Exit mobile version