தமிழ்நாடு

‘அதிமுக-வில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதா?’- கொதி கொதித்த அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 26-ம் தேதி விடுதலை அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் அதிமுக-வின் கோகுல இந்திரா சசிகலாவுக்கு ஆதரவாக ‘அதிமுக-வின் தலைவராக பதவி வகித்த ஒருவரைக் கடைசியுடந் மரியாதை உடனே நடத்த வேண்டும். அவரை யார் அவமரியாதையாகப் பேசினாலும் அதனை ஏற்க முடியாது. அவர் மரியாதையுடன் போற்றப்படக் கூடியவர்” எனத் தெரிவித்தார்.

இதற்கு அதிமுக-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவு இல்லாமல் இருக்கிறார். அதேபோல் வேறு சிலரும் அமமுக-வினருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இருக்கக் கூடாது. சசிகலா வருகை தமிழக அரசியலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றார்.

seithichurul

Trending

Exit mobile version