தமிழ்நாடு

கடைசி நேரத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்த திண்டுக்கல் சீனிவாசன்: என்ன காரணம்?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 12ஆம் தேதி தான் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் வேட்பும்னு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 12ஆம் தேதி திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது சொத்து பட்டியல் தொடர்பான முழு விவரங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து இன்று அவர் தனது சொத்துக்கள் குறித்த முழு விவரங்களுடன் கூடிய மனுவை மீண்டும் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நேரம் முடிவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் இந்த புதிய மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
இதேபோன்று திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் அவர்களும் தனது புதிய சொத்து விவரங்களுடன் கூடிய புதிய வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version