தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக சமீபத்தில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பள்ளிகளை மூட வேண்டாம் என்றும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் கொரோனாவோடு வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்ரும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்திலும் விரைவில் திறக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் பிப்ரவரி 10 பிப்ரவரி மாதத்தில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version