தமிழ்நாடு

தொடக்கப்பள்ளிகள் திறப்பது எப்போது: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

பள்ளிகள், கல்லூரிக்ள் தொடங்கிய ஒரு சில நாட்களில் ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்

தொடக்கப்பள்ளி என்பது மிக மிக முக்கியம் என்றும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 8ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்

இதனை அடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version