தமிழ்நாடு

நவம்பர் 1ல் பள்ளிகள் திறப்பு இல்லையா? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

Published

on

நவம்பர் 1-ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வகுப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் பள்ளிகளை தயார்படுத்தும் பணியில் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியானது
இந்த நிலையில் நர்சரி பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று வெளியான தகவலை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் அது குறித்த விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது ’முதலமைச்சர் அவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்தும், அவர்களை பள்ளிக்கு வரவழைப்பது குறித்தும் தான் பேசினோம் என்றும் ஆனால் பிரிகேஜி ,எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து தெளிவான ஒரு அறிக்கையை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version