தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்

மேலும் அவர் இது குறித்து கூறிய போது பள்ளி மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் என்றும் தேர்வுகள் முடிந்தவுடன் கோடை விடுமுறை குறித்து அதிகாரிகள் மற்றும் முதல்வருடன் ஆலோசனை செய்து தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்

மேலும் இந்த ஆண்டு ஏற்கனவே அதிக அளவு விடுமுறை விடப்பட்டுள்ளது அதுவும் குறிப்பாக டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுக்கு பிறகு அதிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதனையடுத்து அடுத்த கல்வியாண்டிலும் விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறினார்

கோடை விடுமுறை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version